தோப்பூர் அல் அமான் வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு

மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட பின் தங்கிய கஸ்ட பிரதேச பாடசாலையான தோப்பூர் அல் அமான் வித்தியாலயத்தில் , இவ்வருடம் வெளியாகிய 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இம்தியாஸ் அழ்பர் (174) ,எம்.எஸ்.சாக்கீர் (171) ,எம்.எம்.இல்லியாஸ் அஹமட் ஆகிய 3 மாணவர்கள் இன்று (13) வீதியால் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாடசாலையில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்..இந் நிகழ்வினை பாடாசாலையின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்களின் பின்னர் இம் முறையே 3 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன் போது பாடசாலை அதிபர் கே.எம்.றிஸ்மி, படிப்பித்த ஆசிரியர் ரீ.இம்தியாஸ் ஆகியோர் பாடசாலையின் பழைய மாணவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் பிரதம அதீதியாக தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.ஏ.ஐப்பார் கலந்து சிறப்பித்தார்.
al-amaan-school-muthur al-amaan-school-muthur-jpg2 al-amaan-school-muthur-jpg2-jpg3-jpg4 al-amaan-school-muthur99

Comments