இலங்கை அகதிகள் சிலர் தாய்நாட்டுக்கு!

17 பெண்களும், 13 ஆண்களுமாக மொத்தம் 11 குடும்பங்களை சேர்ந்த 30 இலங்கை தமிழர்கள் அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் 18ம் திகதி மதுரையிலிருந்து ஶ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

தற்போது நாடு திரும்ப உள்ளவர்கள் வவுனியா, முல்லைத்தீவு போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என இலங்கை மீள்குடியேற்ற அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) இவர்களுக்கான பயணச் செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், மீள் ஒருங்கிணைப்பு தொகையாக ஒரு நபருக்கு 75 டொலரும், பயணப் படியாக ஒரு நபருக்கு 19 டொலரும், உதவித்தொகையாக ஒரு குடும்பத்திற்கு 75 டொலரும் ஐக்கிய நாடுகள் ஆணையம் சார்பாக வழங்கப்படுகிறது.

Comments