ஜனாதிபதி மாளிகையில் விசேட தீபாவளிக் கொண்டாட்டம்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நிகழ்வு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின்  தலைமையில் தேசிய தீபாவளிப் பண்டிகை நிகழ்வு  நேற்று (29) மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் இந்து சமய பக்தர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு இந்து சமய கலாசார நிகழ்வுகள் விழாவை அலங்கரித்தன.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன் அமைச்சர்களான டி எம் சுவாமிநாதன், மனோகணேசன் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் ராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் பி பீ அபேகோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(படங்கள் : ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments