கந்தளாய்: அல் தாரீக் கனிஷ்ட வித்தியாலய சிறுவர் சந்தை

கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட தி/ அல் தாரீக் கனிஷ்ட வித்தியாலய மாணவர்களின் சிறுவர் சந்தை இன்று வியாழக்கிழமை (6) அப்பாடசாலை வளாகத்தில் வித்தியாலய அதிபர் ஏ.ஆர்.ஜவாஹிர் தலைமையில் நடைபெற்றது.                  

இச்சிறுவர் சந்தையில் கண்கவரும் புதிய வகையான பொருட்களும் கட்சிப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் இச்சிறுவர் சந்தை நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கந்தளாய் வலயக்கல்விப் பணிப்பாளர் பி.எம்.எஸ்.எஸ்.பஸ்நாயக்க,அல் தாரிக் மகா வித்தியாலய அதிபர் ஏ.கே.நசூர் மற்றும் ஆயிஷா மகளீர் மகா வித்தியாலய அதிபர் எம்.சி.நசூர்தீன் உட்பட பாடசாலை அதிபர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.


Comments