வற் வரி சட்டமூலம் நாளை விவாதம்
பெறுமதி சேர் வரி திருத்தச்சட்டமூலம் நாளை புதன்கிழமை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பெறுமதி சேர் வரி தொடர்பான சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் பெறுமதி சேர் திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராக நான்கு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எனினும் இதுகுறித்தான தீர்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஒன்றிணைந்த எதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்புக்கு மத்தியில் பெறுமதி சேர் திருத்தச்சட்டமூலம் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


Comments
Post a Comment