ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியில் குர்தீஸ் படைகள் தாக்குதல்!

குர்தீஸ் படைகள் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகர் பகுதியில் தாக்குதல்களை தொடங்கியுள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவில் 2014-ம் ஆண்டு பல பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற நாட்டை தன்னிச்சையாக உருவாக்கினார்கள்.

இழந்த இந்த பகுதிகளை கைப்பற்ற சிரியா மற்றும் ஈராக் படைகள் தொடர்ந்து முயற்சித்து வந்தன. அவர்களுக்கு அமெரிக்க கூட்டு படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தி உதவி வந்தன.

இரு நாடுகளிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த பகுதியை கொஞ்சம், கொஞ்சமாக கைப்பற்றி வருகிறார்கள். ஏற்கனவே ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த இடங்களில் பாதி பகுதியை இரு நாடுகளும் திரும்ப கைப்பற்றி விட்டன.

இதில், ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த பெரும்பாலான பகுதிகள் மீட்கப்பட்டு விட்டன. ஈராக்கில் 2-வது பெரிய நகரமாக இருப்பது மொசூல். இந்த நகரை 2014-ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். இந்த நகரம் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ளது.

தற்போது ஈராக்கில் உள்ள ஒட்டு மொத்த ஐ.எஸ். தீவிரவாதிகளும் மொசூல் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், மொசூல் நகரின் அருகில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பட்டுப் பகுதிகளில் குர்தீஸ் படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளது.

மொசூல் நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள பஷிகா நகரில் குர்தீஸ் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக் அரசு தரப்பு படைகளும் மொசூல் நகரை நோக்கி கிழக்கு மற்றும் தெற்கு நோக்கு நடத்தப்படுகிறது.

இதனிடையே, பிரான்ஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச ஆலோசனை கூட்டத்தின் போது பேசிய ஈராக் அதிபர் ஹய்தர் அல்-அபாடி 4 நாட்களாக நடத்தப்பட்ட தாக்குதல் எதிர்ப்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருகிறது என்றார்.

Comments