வரி பணத்தில் வளர்ச்சி பெறும் கூட்டு எதிர்கட்சி பின் புலம் யார்?

நல்லாட்சி அமைந்து 22 மாதங்கள் கடந்துக்கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் அரசுக்குள்ளேயே இரா.சம்பந்தன் அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருக்கின்ற போதும் பாராளுமன்றில் கூட்டு எதிர் கட்சியே பலம் வாய்ந்த எதிர் கட்சியாக செயல்பட்டு பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு தடைகளையும் இடைஞ்சல்களையும் ஏற்படுத்திவருகின்றது.

இதற்கு பின் புலத்தில் முன்னைய ஜனாதிபதியும் அவருடைய விசுவாசிகளும் சுருசுருப்புடன் இயங்கி வருகின்றார்கள் ஆனால் அவர்களுக்கெதிராக எந்தவிதமதான ஒழுங்கு நடவடிக்கைகளையும் ஐ.ம.சு. கூட்டமைப்பு எடுக்காதிருப்பது  சந்தேகத்திற்குறியவிடயமாகும்.

பொதுவாக அரசின் நிதி மோசடிகளில் சாதாரண பொது மகன் சம்பந்தப்பட்டிருந்தால் அவரை பிணையில் விடுதலை செய்வது மிக சிரமமான காரியமாகும்  ஆனால் இந்த கூட்டு எதிர்கட்சியினருக்கோ அது விதிவிலக்காகவே இருக்கின்றது.

ஊடகங்களில் வெளியாகும் ஊழல் சம்பந்தப்பட்டமோசடிகள் பல மில்லியன்களாக குறிப்பிடப்பட்டு விசாரணைகளும் வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டாலும் அவர்கள் பிணையில் வெளிவருவது சர்வ சாதாரணமாகவே நடைப்பெற்று வருகின்றது.

விடுதலைப்புலிகளுக்கு தகவல்  வழங்கினார்கள் அல்லது சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பலர் எவ்வித விசாரணையும் இல்லாது சிறையில் அடைக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தும் குற்றவாளிகளைப்போல் விளக்கமறியல் தண்டணையில் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார்கள் .

ஆனால் இந்த கூட்டு எதிர்கட்சியினருக்கோ இரண்டு வாரங்களில் பிணை அவர்கள் விளக்க மறியலில் இருந்து  வெளிவரும்போது தேசிய வீரர்களுக்கு  வழங்கப்படும் வரவேற்பை போன்ற வரவேற்பு உபசாரம் அதற்கு பெரிய விளம்பரங்கள் அதன் மூலம் கிராமிய மக்களிடையே இவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுவரும் நிலைகள் இதற்கு காரணம் யார்? என்ற சாதாரண சந்தேகம் மக்களிடையே இப்பொழுது பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.

நாட்டில் அமைதியான சூழ்நிலையுள்ள இந்த காலகட்டத்தில்  சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் முன்னுரிமையளிக்காது ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து யார் வசம் வைத்துக்கொள்ளளாம் அதற்கான வழிவகைகளிலேயே அதிக கவனம் செலுத்திக்கொண்டு  ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற வகையில் செயல்படும் நிலையே தற்போது நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதற்காக மக்களின் வரிப்பணம் பாரிய அளவில் செலவாகிவருகின்றது.இந்த நிலையிலேயே கூட்டு எதிர் கட்சியும் ஆட்சியை தன் வசப்படுத்த ஆர்வம் கொண்டு பாரிய செயல் திட்டங்களை நாடெங்கும் செய்து வருகின்றது இதற்காக முன்னாள் ஜனாதிபதி என்ற காரணத்தால்அவருக்கு வழங்கப்படும் அத்தனை வளங்களும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளினால் அனுபவிக்க முடியாத அத்தனை வரப்பிரசாதங்களையும் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு  அரசு வழங்கி வருவதை போன்ற பிரமைகள் சாதாரண பொது மக்களுக்கு  தற்போது தோன்றுறியுள்ளது.

இந்த கூட்டு எதிர் கட்சியை தோற்றிவிக்க மறைமுகமாக மக்கள் நிதி செலவிடப்பட்டுவருகின்ற காரணமும் ஒன்றாக இருப்பதால் மக்கள் இன்று பல்வேறு பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுக்கும் நிலையேற்பட்டுவருகின்றது.

இந்நிலையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்காண தீர்வு கிடைப்பிலும்  மக்களின் வரி பணம் கட்சிகள் உற்பத்தியாகுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகி்றது.

இதன் பின் புலத்தில் சக்தி படைத்த அரசியல் தலைமைகளே இயங்குகின்றது இதனால் நாட்டு மக்களுக்கு நன்மையைவிட இருள் சூழ்ந்த நிலையே தொடரப்போகின்றது ஆனால்  அரசியல்வாதிகளோ அவர்கள் எந்த இனமானாலும்  எந்த விதத்திலும் பாதிக்கப்படப்போவதில்லை என்பதை யதார்த்தமாகும்

Comments