இலங்கை வந்தார் றீட்டா ஐசக்!
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் 20ம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார் என குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.
இதன்பொருட்டு இவர் கொழும்புக்கு மேலதிகமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கும் செல்லவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் றீட்டா ஐசக் அரசாங்க அதிகாரிகள், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 20ம் திகதி கொழும்பு ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பிலும் இவர் கலந்து கொள்ளவுள்ளார்.

Comments
Post a Comment