கட்டுநாயக்கவில் சீன பெண் ஒருவர் அதிரடி கைது!

இலங்கையில் இருந்து சீனாவிற்கு 1 கோடியே 16 இலட்சம் ரூபா மதிப்புள்ள மாணிக்ககற்களை கடத்தி செல்ல முயற்சித்த சீனா நாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு சீனா நோக்கி பயணிக்க வந்த சீனா யுவதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க அதிகாரிகளினால் இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது பயணப்பையில் 247 மாணிக்ககற்களை மறைத்து வைத்து சீனாவிற்கு கடத்தி செல்ல முயற்சித்துள்ளார்.

கைப்பற்றிய மாணிக்ககற்கள் அரச உடமையாக்கப்பட்டதோடு குறித்த பெண்ணிற்கு 3 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments