சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஜனாதிபதியின் கீழ்?

நேற்றைய தினம் இலங்கை மன்ற கல்லுாரியில்  போரினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கான வீடு மற்றும் காணிகள் வழங்கும் வைபவத்தில் கலந்து உரையாற்றும்போது ஜனாதிபதியால்  கூறப்பட்ட விடயங்களின் மூலம் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான அமைச்சை ஜனாதிபதி தனது நிர்வாகத்திற்கு கொண்டுவரவிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நேற்றைய தினம் ஜனாதிபதி கதிர்காமத்திற்கு சென்றிருந்ததாகவும் அங்கே கம்உதாவ மணிக்கூட்டு கோபுரம் அருகே இருக்கும் பிரபல சோதிடரை சந்தித்ததாகவும் அவர் கூறிய ஆலோசணையின் பிரகாரம் அரசில் சில மாற்றத்தை ஜனாதிபதி உடனடியாக செய்ய வேண்டும் என்று கூறப்பட்டதாம்.

அந்த ஆலோசணையின்படி மாற்றங்களை செய்தால் ஜனாதிபதிக்கு நன்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே  மாலை கொழும்பில் இராணுவத்தினருடனான இந்த வைபவத்தில் இவ்வாரான கருத்தை வெளியிட்டதாகவும் தெரியவருகின்றதாம்.

இந்த சோதிடரை முன்னாள் ஜனாதிபதியும் சந்தித்திருப்பதாகவும் அப்போது அவருக்குசிரமமான காலம் முடிவடைந்துவிட்டதாகவும் ஆனால் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான சந்தர்ப்பம் சிறிதும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த செய்தி கூறுகின்றது.

இதன் அடிப்படையில் ஜனாதிபதி சில மாற்றங்களை செய்ய தயாராகிவருவதாகவும் இந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Comments