ஜனாதிபதி நாடு திரும்பினார்!

தாய்லாந்துக்கு உத்திபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த விஜயத்தை நிறைவு செய்து நேற்று இரவு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 11மணியளவில் ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்கவிமான நிலையத்தை அவர் வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்கொக்கில் நடைபெற்ற ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அவர் கடந்த 7ஆம் திகதி தாய்லாந்து பயணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments