தன்னைத் தாக்கும் ஊடகங்கள் குறித்து ஜனாதிபதி!
தனக்கு தாக்குவதற்கு இவரை விட ஜனாதிபதியொருவர் கிடைக்க மாட்டார் என ஊடக நிறுவனங்கள் நினைக்கும் அளவுக்கு தனக்கு எதிரான பிரச்சாரங்களை குறித்த ஊடக நண்பர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 61 ஆவது ஆண்டு நிறைவு விழா பி.எம்.ஐ. சி.எச். இல் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
நான்கு திசையிலும் அவர்கள் என்மீது தாக்குதல் நடத்துகின்றனர். நான் அந்த அனைத்து தாக்குதல்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கு இடமளித்துள்ளேன் என்பது தொடர்பில் சந்தோசப்படுகின்றேன்.
கடந்த 2015 ஜனவரி 8 இற்கு முன்னர் இவ்வாறு செயற்படுவதற்கு முதுகெலுப்பும் இருந்திருந்தால், இந்த வீரம் இருந்திருந்தால் எவ்வளவு சிறந்ததாக இருந்திருக்கும்.


Comments
Post a Comment