நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றனவா?
நீதிபதிகள் சிலருடைய தொலைபேசி ஒட்டுக் கேட்டல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
சில நீதவான்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்த கட்சி கோரியுள்ளது.
தொலைபேசி ஒட்டுக் கேட்டல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் மௌனம் காத்து வருவதாகவும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானால் அது குறித்து தமது நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவாக வெளிப்படுத்த வேண்டுமெனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment