பணிபாளர் விவகாரத்தில் ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்படும் பணிப்பாளர் தனது பணிகளை முறையாக செய்ய தவறினால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டுமென சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்தொன்று தொடர்பாக அதிருப்தியில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவி விலகியிருந்தார்.

அதற்கமைய அந்தப் பதவிக்கு தற்காலிகமாக பதில் பணிப்பாளர் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்படுபவர் செயற்திறன் மிக்கவராக இருக்க வேண்டும் அப்படியில்லையென்றால் அதற்கு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும் எக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

Comments