ஜனாதிபதி தாய்லாந்துக்கு இன்று பயணமாகிறார்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஆசிய பிராந்திய வலய ஒத்துழைப்பினை மேம்படுத்தும் மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இன்று முற்பகல் தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டுச் செல்வார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஆசியாவின் முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாகவும் 34 ஆசிய நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment