சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சித்திரப் போட்டியும், ஆவணக்காப்பகம் அங்குரார்பண நிகழ்வும்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டியும், ஆவணக்காப்பகம் அங்குரார்பணம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று (26) புதன்கிழமை சாய்ந்தமருது நூலகத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது நூலகர் ஜனாபா எப். றிஹானா ஹாலித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.கோமதி, நூலக உத்தியோத்தர்களான எம்.எஸ்.பௌசி, எம்.எம்.எஸ்.ஹிதாயா, எம்.எஸ்.நிபாறா உள்ளிட்ட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments