பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வியினை வழங்க வேண்டும் – மன்சூர்
சம்மாந்துறை ஜம்இயத்துல் குர்ஆனில் ஹக்கீமின் ஏற்பாட்டில் முஹர்ரம் விழாவும், அல்-குர்ஆனை திறமையாக பார்த்து ஓதிமுடித்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று(17) சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் அல்-ஹாபீஸ் மௌலவி ஏ.எல். அப்துல் றசீட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே- பெற்றோர்கள் உங்களது பிள்ளைகளை ஒழுக்க சீடர்களாக வளர்த்தெடுத்தால் எதிர்காலத்தில் இந்த நாட்டில் சிறந்த கல்விச் சமுதாயத்தை உருவாக்க முடியும். அவ்வாறு நாம் ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக எமது பிள்ளைகளை வளர்க்கா விட்டால் நாம் எதிர்பார்கின்ற ஒரு கல்விச் சமூகத்தை நாம் எதிர்காலத்தில் எதிர்பார்க்க முடியாது போய்விடும்.
ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை எதிர்காலத்தில் ஒரு சமூகத்தை வழி நடாத்துகின்ற சிறந்த தலைவர்களாகவும் மார்க்கத்தினை போதிக்கும் கல்வியலாளர்களாகவும் மாற்ற முன்வர வேண்டும். அப்போதுதான் நாட்டில் ஒழுக்கமுள்ள ஒரு சமூதாயத்தை உருவாக்க முடியும்.
இவ்வணைப்பினால் நடத்தப்பட்ட குர்ஆன் பொதுப் பரீட்சையில் சித்திபெற்ற 200 மாணவர்களைப் பாராட்டி கௌரவித்து சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்சிகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், அக்கரைப்பற்று உம்மு தர்ஹா பெண்கள் அறபுக் கல்லுாரியின் அதிபர் அப்துல் ஹமீட், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷீறாவின் தலைவரும், அம்பாறை மாவட்ட மேலதிக அதிபருமான எம்.ஐ. அமீர், சம்மாந்துறை ஜம்இயத்துல் குர்ஆனில் ஹக்கீமின் தலைவர் மௌலவி எம்.ஏ.எம். ஜாபீர், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.சுபைதீன், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.ஜௌபீர், உலமாக்கள், கல்விமான்கள், மதரஸா அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

Comments
Post a Comment