ஊடகங்கள் மீது கடும் கோபத்தில் மைத்திரி!

தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ள ஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி, இலங்கை மன்றக் கல்லூரியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆற்றிய உரையை ஊடகங்கள் சில கீழ்த்தரமான முறையில் திரிபுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஊழல் ஆணைக்குழு, நிதி மோசடி விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு ஆகிய நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய  சர்ச்சைக்குரிய உரை குறித்து நேற்று (27) பி.எம்.ஐ.சி.எச். இல் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி நினைகூர்ந்துள்ளார்.

தன்மீது எவ்வளவுதான் தாக்குதல் நடாத்தினாலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் கொள்கையை ஒருபோதும் மாற்றிக் கொள்ள மாட்டேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், பிரமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments