திருக்குமார் நடேசன் பிணையில் விடுதலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்கை நிரூபமாவின் கணவரான திருக்குமரன் நடேசன் பொலிஸ் நிதி குற்றவிசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜரானார்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட அவரை பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Comments