முதலையிடம் சிக்கி உயிரிழந்த மீனவர்!

மட்டக்களப்பு, உப்போடை பிரதேசத்தில் இன்று அதிகாலை மீனவர் ஒருவர் முதலை தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உப்போடையைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அழகேந்திரராஜா (63) என்பவரே இவ்வாறு முதலை தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

வழக்கம் போல் குறித்த மீனவர் மட்டக்களப்பு வாவியில் இறால் பிடித்துக் கொண்டிருக்கும்போது, முதலையானது அவரது காலை கடித்து நீருக்குள் இழுத்துச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இவருடைய வலைகள் ஒருபக்கம் வாவியோரம் கிடைப்பதால் இவ்வாறு சந்தேகிக்கப்படுகின்றது.

இவரை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் கிராமவாசிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments