ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு சுதந்திரக் கட்சி ஒருவரை உடனடியாக பிரதமராக்கவும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையினை நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சி புறக்கணிக்கின்றது. எனவே ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரை உடனடியாக பிரதமராக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நல்லாட்சி அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரைகளுக்கும் கூட்டங்களுக்கும் தடை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் மக்கள் எம்முடன் இருக்கின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம் என்றும் கூட்டு எதிரணி குறிப்பிட்டுள்ளது.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர கூறுகையில்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாகவே செயற்படுகின்றது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சிக்கின்ற நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக அன்று துணைச்செய்தது. எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறும் விடயங்கள் அமைச்சரவையில் உள்வாங்கப்படுவதில்லை. அவரது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை.
உதாரணமாக சிகரட்டின் விலை அதிகரிப்பை பல முறை வலியுறுத்தியும் கவனத்தில் கொள்ளாத நிலையில் தற்போது 7 ரூபாவால் அதிகரித்துள்ளனர். 2017 ஆம் ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்டாக ஏற்கனவே ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் தற்போது வேறு அறிவிப்புகளை முன்னெடுக்கின்றனர்.
எனவே ஜனாதிபதியின் திட்டங்கள் உள்வாங்கப்படாத நிலையில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
மக்கள் எம்முடன் இருக்கின்றனர். எனவே தான் 8 ஆம் திகதி பேரணிக்கு தடை விதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது.
அனைத்து தடைகளும் கூட்டு எதிர் கட்சிக்கு எதிராகவே முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு முதலமைச்சருக்கு எதிராக வாயை திறப்பதே இல்லை என்றார்.

Comments
Post a Comment