தீடிரென தீ பற்றி எரிந்த பஸ்!
நானுஓயா பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீடிரென தீ பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நானுஓயா பொரிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா எடின்புரோ பகுதியில் குறித்த பஸ் தீக்கிரையாகியுள்ளது
வழமைபோல் பஸ் நானுஓயா நகரத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த பஸ், இன்று அதிகாலை நகரத்தில் இருந்து சம்பவம் நடத்த இடத்திற்கு இனந்தெரியாதவர்களால் கொண்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்தோடு குறித்த பஸ்ஸின் சாரதியை தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து நுவரெலியா குற்ற பரிசீலனை பிரிவினரும், நானுஓயா பொலிஸாரும் மேலதிக விசாரணகைளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment