மீட்கப்பட்ட உடற்பாகங்கள் வசீம் தாஜூடினின் அல்ல…?

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிலிருந்து ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலை தொடர்பிலான உடல் பாகங்கள் அண்மையில் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டது. குறித்த உடற்பாகங்கள் வேறு வழக்குடன் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசாங்கத்திற்கு சொந்தமான பொருட்கள் தனியார் மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தமை மற்றும் அரச சொத்துக்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் கொழும்பு மாவட்ட முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது அங்கிருந்து மேலும் 26 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட மீட்க்கப்பட்டிருந்தன. இவ்வாறு மீட்க்கப்பட்ட உடற்பாகங்கள் நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புடையதால் அது அரசாங்கத்திற்கு உடமையான பொருட்களாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் கொழும்பு மாவட்ட முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment