கொஞ்சம் கொஞ்சமாக குர்ஆன் வசனங்களை ஹதிசையும் கற்று அறிந்து கொள்வோம்!!!

1. கேள்வி : உமர் (ரலி) அவர்கள் மீதமான தரமான கீழாடையை யாருக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்கள்?
பதில் : உம்மு ஸலீத் (ரலி) (ஆதாரம்: புகாரி 2881)
2. கேள்வி : மரங்கள் எப்படி கனிகளைத் தருகிறது?
பதில் : இறைவனின் விருப்பப்படி (அல்குர்ஆன் 14:25)
3. கேள்வி : போர்களத்தில் பெண்கள் ஆற்றிய பங்கு என்ன?
பதில் : காயமடைந்தவர்களுக்கு மருந்திடல், இறந்தவர்களை ஊருக்குக் கொண்டு செல்லுதல் (ஆதாரம் :புகாரி 2882)
4. கேள்வி : தீய கொள்கைக்கு உதாரணம் என்ன?
பதில் : கெட்ட மரம். அது பூமியின் மேற்புறத்திலிருந்து பிடுங்கப்பட்டுள்ளது; அது நிற்காது (அல்குர்ஆன் 14:26)
5. கேள்வி : போர்களத்தில் அம்பு தாக்கிய எந்த நபருக்காக நபிகளார் பிரார்த்தனை செய்தார்கள்?
பதில் : உபைத் அபூஆமிர் (ரலி) (ஆதாரம் :புகாரி 2884)
6. கேள்வி : தர்மங்களை எப்படி வழங்கலாம்?
பதில் : இரகசியமாகவும் வெளிப்படையாகவும் வழங்கலாம் (அல்குர்ஆன் 14:31)
7. கேள்வி : அனஸ் (ரலி) அவர்களுக்கு பணிவிடை செய்த மூத்த நபித்தோழர் யார்?
பதில் : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) (ஆதாரம் :புகாரி 2888)
8. கேள்வி : அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிவிட முடியுமா?
பதில் : முடியாது (அல்குர்ஆன் 14:34)
9. கேள்வி : கைபர் போரில் நபிகளாருக்கு கிடைத்த மனைவியின் பெயர் என்ன?
பதில் : ஸஃபிய்யா (ரலி) (ஆதாரம் :புகாரி 2893)
10. கேள்வி : மக்காவை அபய பூமியாக ஆக்க என்று பிரார்த்தனை செய்தவர் யார்?
பதில் : நபி இப்ராஹீம் (அலை) (அல்குர்ஆன் 14:35)
அல்ஹம்துலில்லாஹ்

சித்திக்கா ஹைதர்

Comments