கிண்ணியாவில் போதைப் பொருளுக்கெதிராக ஊர்வலமும் கையெழுத்தும் Inbox

போதைப்பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம்' என்ற தொனிப்பொருளில் இன்று வெள்ளிக்கிழமை கிண்ணியாவில் விழிப்புணர்வு வீதி ஊர்வலமும், ஒரு இலட்சம் கையெழுத்து சேகரிப்புகளும் இடம்பெற்றது.

கிண்ணியா ஜாம ஆத்துல் ஸலாமா  அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊர்வலம், கிண்ணியா அல்- அக்ஸா கல்லூரியிலிருந்தும், கிண்ணியா மத்திய கல்லூரியிலிருந்தும்  பிரதான வீதியாகச் சென்று  பொது நூலக முன்றலில் ஒன்றுகூடியது.

இந்த இடத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றதோடு  போதைப்பொருள் பாவனையை  தேசத்தில் இருந்து ஒழிப்பதற்கு பொது மக்கள் கையெழுத்திட்டனர்.

இந் நிகழ்வில் கிண்ணியா முன்னாள் நகர சபையின் தவிசாளர் டொக்டர் ஹில்மி மகரூப், கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி .கிண்ணியா தள வைத்திய சாலை மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எச்.எம்.சமீம். வைத்திய அதிகாரி ஏ.எம்.அஜீத், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஹசானா பரீத் 



Add caption

Comments