கொழும்பில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து! October 6, 2016 இலங்கை செய்திகள் Leave a comment

கொழும்பு  இரத்மலானை பிரதேசத்தில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இரத்மலானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தீ அணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என இரத்மலானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை இரத்மலானை நகரிலுள்ள மருந்தகம் ஒன்றிலேயே தீ பரவியிருப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்மலானை  பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments