கல்முனையில் பொலித்தீன், பிளாஸ்டிக், இலத்திரனியல் கழிவுகள் சேகரிப்பு (Photos)
இதன் ஆரம்ப நிகழ்வு மாநகர சபை முன்பாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட நிலையப் பொறுப்பதிகாரி எம்.கோகுலன், சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.இஸ்ஹாக், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.ஜயநிதி, கல்முனை மாநகர சபையின் சுகாதார பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.எம்.அஹ்சன் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
சுற்றாடலுக்கும் மனித உடலுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை பாதுகாப்பான முறையில் சேகரித்து, அகற்றும் பொருட்டு ‘கழிவுகளற்ற இலங்கை’ எனும் நிகழ்ச்சித் திட்ட வாரம் இம்மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டே இன்று கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார். (ஸ)
– அஸ்லம் எஸ்.மௌலானா –



Comments
Post a Comment