.03 தேசியப்பட்டில் MPகள் பதவி விலகவுள்ளனர் – அவர்கள் யார்?
தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் மூன்று பேர் பதவி விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொண்ட மூன்று உறுப்பினர்கள் இவ்வாறு பதவி துறக்க உள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு மூன்று பேர் பதவி விலக உள்ளனர்.
எதிர்வரும் தேர்தல்களுக்கு முன்னதாக வலுவான சிலரை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது,
எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக இந்த மூன்று உறுப்பினர்களும் பதவி விலக உள்ளனர்.
இவ்வாறு பதவி விலகும் ஒருவருக்கு மாகாண ஆளுனர் பதவியொன்று வழங்கப்பட உள்ளது. ஏனைய இருவருக்கும் அரசாங்கத்தின் உயர் பதவிகள் வழங்கப்பட உள்ளன.
வெற்றிடங்களுக்காக நியமிக்கப்பட உள்ள உறுப்பினர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஒருவர் இளைய தலைவர் எனவும் ஏனைய இருவரும் உயர் தொழில்துறை நிபுணர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் 12 பேர் தேசியப் பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்டனர்.
எஸ்.பி. திஸாநாயக்க, விஜித் விஜயமுனி டி சொய்சா, டிலான் பெரேரா, லக்ஸ்மன் யாபா அபேவர்தன, அங்கஜன் இராமநாதன், ஏ.எச்.எம்.பௌசீ, பைசர் முஸ்தபா, சரத் அமுனுகம, மலிக் ஜயதிலக்க, மஹிந்த சமரசிங்க, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், திலங்க சுமதிபால ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டனர்.
இவர்களில் மூன்று பேர் பதவி விலகி புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Comments
Post a Comment