டிசம்பர் 1-ம் திகதி இலங்கை முழுவதும் அபராத போராட்டம்!
டிசம்பர் 1-ம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை தனியார் பேருந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதனை அந்த சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரயன்ஜித் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
7 வீதி ஒழுங்கு குற்றங்களுக்காக ரூபாய் 25 ஆயிரம் வரை அபராதம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதே காரணத்திற்காக அனைத்து மாகாண தனியார் பேருந்து சங்கம் தொழிற்சங்க போராட்டத்தை நடத்தவுள்ளது. அத்துடன் இந்த அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment