முல்லைத்தீவில் 10 பேர் அதிரடி கைது!

முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ்  அத்தியட்சகர் காரியாலய   பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை   பொலிஸ் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில்    சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 10 பேரை பொலிஸார் புதையல் தோண்டுவதற்குரிய உபகரணங்களுடன் கைது செய்துள்ளதாக  முல்லைத்தீவு மாவட்ட  பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய  தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை  4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி உத்தரவிற்கமைய முல்லைத்தீவு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி  உப பொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தலைமை‌யிலான  பொலிஸ் அணியினரின் நீண்ட நேர தேடுதல் முயற்சியின் பின்னராக, மேற்படி சட்ட விரோதமான முறையில்  புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட பத்து பேரை கைது செய்துள்ளது.

அத்துடன்  புதையல்  தோண்டுவதற்கு  பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் குறித்த இடத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட தடயப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பத்து  சந்தேக நபர்களும்  ஒட்டுசுட்டான்  பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளிற்காக  ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,  மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்  முல்லைத்தீவு மாவட்ட  பொலிஸ் அத்தியட்சகர்  காரியாலய  தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments