நாளை 12 மணித்தியால நீர் வெட்டு!

நாளை சில பகுதிகளுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடவத்தை – கெரவலபிடிய அதிவேக வீதிப் பகுதிக்கு நீர் கொண்டு செல்லும் குழாய் பொருத்தும் செயற்பாடுகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய நாளை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, மாடாகொட, கெரவலபிடிய, திக்கோவிட, எலபார மற்றும் கெரவலபிடிய கர்மாந்தபுர, உஸ்வெடகெய்யாவ, போபிடிய, பமுணுகம, புபுதுகம மற்றும் தெலதுரு ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, களுத்துறை, வாத்துவ, அளுத்கம உள்ளிட்ட பகுதிகள் சிலவற்றில் நாளை காலை 08 மணி முதல் இரவு 08 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

Comments