திருமுருகண்டியில் வாகன விபத்து – 13 பேர் காயம்!
மாங்குளம் – திருமுருகண்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஸ்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்பது ஆண்கள் மற்றும் நான்கு பெண்களுமே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Comments
Post a Comment