பெண்களிடம் மட்டுமே பிக்பொக்கற் அடிக்கும் 17 வயது யுவதி கைது!!

police
நீர்­கொ­ழும்பு மற்றும் கட்­டு­நா­யக்க பிர­தே­சங்­களில் பிக்பொக்கற் அடித்து வந்த 17 வயது யுவதி ஒருவரை கட்­டு­நா­யக்க பொலிஸார் புதன்­கிழமை கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் நிலைய பொறுப்பதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சி.ஐ. பிரி­யந்த ஏக்க நாயக்க தெரி­வித்தார்.

கட்­டு­நா­யக்க, எவ­ரி­வத்தை பிர­தே­சத்தில் உள்ள கடைக்கு சிறு குழந்­தை­யுடன் வந்த பெண் ஒரு­வரின் பணத்தை சந்­தேக நப­ரான யுவதி திருட முயன்ற போதே கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கைது செய்­யப்­பட்ட யுவ­தி­யிடம் பொலிஸார் மேல­திக விசா­ரணை மேற்­கொண்ட போது சந்­தேக நபரினால் திரு­டப்­பட்ட கைத்தொலை­பேசி, பேர்ஸ், அடை­யாள அட்டை உட்­பட பல்­வேறு பொருட்­களை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். கைது செய்­யப்­பட்ட யுவதி கற்­பிட்டி, கந்­தக்­குளி பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ராவார்.
கடந்த ஒரு வரு­டத்­துக்கு முன்னர் கட்­டு­நா­யக்க சுதந்­திர வர்த்க வல­யத்­தி­லுள்ள தொழிற்­சாலை ஒன்றில் இவர் இணைந்­துள்ளார். சனிக்­கி­ழமை தினங்­களில் தன்­னுடன் வேலை செய்யும் நண்பிகளுடன் நீர்கொ­ழும்பு இரவுநேர சந்­தைக்கு செல்­வ­தனை இவர் வழக்­க­மாகக் கொண்­டுள்ளார்.
பின்னர் தனித்து இரவுநேர சந்­தைக்குச் சென்று பெண்­களின் பணம், கைத் தொலை­பே­சி­களை திருடி வந்­துள்ளார். இவர் பெண்­க­ளிடம் மாத்­தி­ரமே இவ்­வாறு திரு­டி­யுள்ளார்.

இவ­ரி­ட­மி­ருந்து 55 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யு­டைய செல்­லிடத் தொலை­பேசி -1, 30 ஆயிரம் ரூபா பெறுமதி­யு­டைய தொலை­பேசி – 3, தேசிய அட்­டைகள் – 11, பணப்­பைகள் – 35 என்­ப­வற்றை பொலிஸார் கைப்பற்­றி­யுள்­ளனர்.
கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­துக்குச் சென்ற பெண் ஒரு­வ­ரிடம் இந்த யுவ­தி 70 ஆயிரம் ரூபா பணத்தை திரு­டி­யுள்­ள­மையும் தெரிய வந்­துள்­ள­து.
கட்­டு­நா­யக்க பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சி.ஐ. பிரி­யந்த ஏக்க நாயக்­க­வுக்கு கிடைத்த தக­வ­லை­ய­டுத்தே சந்தேக நபர் கட்டுநாயக்க, எவரிவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments