ஒரு கொலைக்கு 18 பேருக்கு மரண தண்டனை!
தெரணியாகலை நூரி தோட்ட முகாமையாளர் நிஹால் பெரேரா கொலை வழக்கின் தீர்ப்பில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை மேல் நீதிமன்றம் இவ்வாறு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இதேவேளை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 21 பேரில் 18 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏனைய 3 பேரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று அவிசாவளை மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது, மேல் நீதிமன்ற நீதிபதி தேவிக்கா அபேரத்ன 18 பேருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5 ஆம் திகதி தெரணியாகலை நூரி தோட்ட முகாமையாளர் நிஹால் பெரேரா கொலை செய்யப்பட்டிருந்தார்.
நூரி தோட்ட அதிகாரி நிஹால் பெரேரா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தெரணியாகல பிரதேசசபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க எனப்படும் அத கொட்டா உள்ளிட்ட 21 சந்தேகநபர்ககள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment