2-ம் தரம் கல்வி பயிலும் சிறுமி சாரதியால் பாலியல் துஷ்பிரயோகம்!
நீர்கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் தரம் 2 இல் கல்வி கற்கும் சிறுமியை ஒரு மாத காலமாக பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த வாகன சாரதிக்கு விளக்கமறியில் வைக்க உத்தரவு விடப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபரை எதிர்வரும் 21-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் 32 வயதுடைய திருமணமானவர். சந்தேக நபரை நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி கட்டுநாயக்காவிலிருந்து நீர்கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலைக்கு சென்று வந்துள்ளார்.
அந்த வாகனத்தில் பயணிக்கும் ஏனைய மாணவர்களை பாடசாலைக்கு அருகில் இறக்கிய பின் குறித்த மாணவியை வாகனத்தில் வைத்து சந்தேக நபர் கடந்த ஒரு மாத காலமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.


Comments
Post a Comment