ஹஜ் உம்ரா யாத்திரைகளுக்கு 2010 க்கு பின்பு பெறப்பட்ட கடவுச்சீட்டுகளே ஏற்கப்படும்
சவூதி ஹஜ் விவகார அமைச்சு அறிவிப்பு
ஹஜ், உம்ரா யாத்திரை மேற்கொள்வோரது கடவுச்சீட்டு 2010 ஆம் ஆண்டுக்குப் பின்பு வழங்கப்பட்டதாக இருக்கவேண்டுமென சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தத் திடீர் உத்தரவினால் உம்ரா கடமையை மேற்கொள்ள தயாராக இருந்தவர்கள் பாதிப்புக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
சவூதி அரேபியா விடுத்துள்ள உத்தரவுக்கு அமைய 2010 ஆம் ஆண்டுக்குப் பின்பு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகள் உடையோருக்கே உம்ரா கடமையை நிறைவேற்ற அனுமதியளிக்கப்படுகிறது.
2010 ஆம் ஆண்டுக்குப் பின்பு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளுக்கே விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தினால் நவம்பர்– டிசம்பர் மாதங்களில் உம்ராவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
2010 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ள இவர்கள் புதிய கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் உம்ரா யாத்திரிகர்கள் கடவுச்சீட்டினைப் புதுப்பித்துக் கொள்வதற்காக பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு வருகை தருவதை அவதானிக்க முடிகிறது.
முகவர் நிலையங்களும் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளன.
பெரும்பாலான முகவர் நிலையங்கள் உம்ரா யாத்திரைக்கு சேகரித்திருந்த 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட கடவுச் சீட்டுகளை உரியவர்களுக்கு திருப்பிக் கையளித்து அவற்றைப் புதுப்பிக்கும்படி கோரியுள்ளன.

Comments
Post a Comment