உழவு இயந்திரம் விபத்து: 20 மாணவர்கள் படுகாயம்: ஒலுவிலில் பெற்றோர்கள் கண்ணீருடன்
ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலயத்தில் இன்று (04) சிரமதான வேலைகளில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்த கழிவுகளை ஏறிச்சென்ற உழவு இயந்திரம் சற்று முன் புறண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று வைத்தியசாலையில் ஒலுவில் மக்கள் சூழ்ந்துள்ளதாக ஒலுவில் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.


Comments
Post a Comment