மட்டக்களப்பில் 25 வயது இளம்பெண் தற்கொலை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை துர்க்கை அம்மன் வீதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

25 வயதான அற்புதராஜா பிரசாந்தி என்பவரே இவ்வாறு இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments