கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆசிரியர்களுக்கான பரீட்சை இம்மாதம் 27 திகதி

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாகீரின் பிரேரணைக்கு மீளவும் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆசிரியர்களுக்கான பரீட்சை இம்மாதம் 27 திகதி நடத்த தீர்மானம்.

கடந்த 22.10.2016ஆந் திகதி கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிப்பதற்காக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சை வினாத்தாள் தொடர்பாக பரீட்சார்த்திகள் மத்தியில் சர்ச்சை ஒன்று எழுப்பப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே.எம்.லாகீர்இ ஆர்.எம். அன்வர்இ மற்றும் எம். நடராஜா ஆகியோரினால் மேற்படி விடயம் சம்மந்தமாக 2016.10.27ஆந்திகதி நடைபெற்ற மாகாண சபை அமர்வின்போது அவசர பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையினை இரத்துச் செய்யும்படி விவாதிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் கிழக்கு மாகாண மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பாடசாலை ரீதியாக இலங்கை ஆசிரியர் சேவை, தரம் 3-ஐ (அ) க்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை
கடந்த (24.08.2016) திகதி விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

அவ் விண்ணப்பத்தில் பொது அறிவு வினாத்தாளில் ‘ஆசிரியர் துறைக்கு இயைபுடைய அந்த துறை தொடர்பான பொது அறிவு அத்துடன் மற்றும் தேசிய ரீதியல் இடம்பெற்ற மற்றும் இடம் பெறுகின்ற கல்வியின் போக்கு சம்பந்தமான பொது அறிவு மற்றும் கல்வியினை நவீனமயமாக்கல் சம்பந்தமான பொது அறிவினைப் பரீட்;சிப்பதற்காக பல்தேர்வு’ எனக் குறிப்பிடப்பட்டு விண்ணப்பத்தில் கோரப்பட்டிருந்தது.

ஆனால் 22.10.2016 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் வினாத்தாளானது கல்விக்கு சம்பந்தமின்றி சர்வதேசம், தேசிய ரீதியாக இடம்பெற்ற சம கால பொது அறிவை மாத்திரம் மையப்படுத்தி பரீட்சை இடம் பெற்றுள்ளது. பகிரங்கமான அறிவித்தலுக்கு மாற்றமாக இருக்கின்ற படியாலும், பரீட்சைக்கும், விண்ணப்பத்திற்கும் முரண்பாடுகள் இருக்கின்ற படியால் தோற்றிய பரீட்சாத்திகள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

எனவே குறித்த பரீட்சையினை ரத்துச் செய்து மீளவும் உரிய பிரமாணப்படி கோரப்பட்டு அதற்கேற்ப பரீட்சையினை நடத்துவதற்கு இவ் உயரிய சபை கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு உத்தரவினை இடுமாறு கோரியதற்கிணங்க மீளவும் பரீட்சையினை எதிர் வரும் (27.11.2016) அன்று நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதை தெரிவித்தார் .

ihzana fareed

Comments