298 கிலோ தங்கூசி வலையுடன் ஒருவர் கைது
கிண்ணியா பொலிஸ் பிரிவுற்குற்பட்ட குறிஞ்சாங்கேணி பகுதியில் ஹாட்வெயார் விற்பனை நிலையமொன்றில் இன்று (10) மாலை 5.30 மணியளவில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கிண்ணியா பொலிஸாரின் உதவியுடன் சட்ட விரோதமான 298 கிலோ மீன்பிடி வலைகளை கைப்பற்றியுள்ளனர்.
இச்சட்டவிரோதமான வலைகளை ஹாட் வெயார் வியாபார நிலையத்தில் வைத்து விற்பனை செய்வதாக கடற்றொழில் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற புலன் விசாரணைக்கு அமைவாக பொலிஸாருடன் இணைந்து சோதனையிட்ட போதே 298 கிலோ தங்கூசி வலைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கிண்ணியா.குறிஞ்சாங்கேணி பகுதியைச்சேர்ந்த செய்னுலாப்தீன் மஹ்ரூப் (63 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை வௌ்ளிக்கிழமை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
Post a Comment