தோப்பூர் ஹபிபுல்லாஹ் ஆசிரியர்: 36 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு
.கணித மேதை தோப்பூர் ஏ.ஆர்.ஹபிபுல்லாஹ் ஆசிரியர் அவர்கள் 36 வருடங்களாக ஆசிரியராக கடமையாற்றி நேற்று 2016. 11.28 தனது 60வது வயதில் விடுகை பெற்றுச் சென்றார்.அந்த வகையில் அவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (28) தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்த ஏற்பாடுகளை அவரது மாணவர்களும் அபிமானிகளும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன் போது ஹபிபுல்லாஹ் ஆசிரியர் பொன்னாடை போர்த்தி 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.அத்தோடு கிழக்கு வானம் முஸ்தபா மௌஜுத் அதிபர் அவர்கள் வாழ்த்துப்பா ஒன்றினை பாடியிருந்ததோடு பாலத்தோப்பூர் ஸாஹிரா வித்தியாலய அதிபர் ஏ.பி.ஏ.ஜப்பார் விடுகை பெறும் ஆசிரியர் தனது சேவைக் காலத்தில் நடந்து கொண்ட விதம் குறித்து மனதை நெகுழ வைக்கும் உரையொன்றினையும் நிகழ்த்தியிருந்தார்.
இந் நிகழ்வில் தோப்பூர் நூரியா அரபுக் கல்லூரி அதிபர் ஏ.கே.எம்.நஜீம் (பலாஹி) மற்றும் விடுகை பெற்றுச் செல்லும் ஆசிரியரிடம் கணிதப் பாடம் கற்ற மாணவர்கள், அவரது அபிமானிகளும் கலந்து கொண்டனர்.







Comments
Post a Comment