கொழும்பில் 48 பாடசாலைகளில் டெங்கை ஏற்படுத்தும் நுளம்பு முட்டைகள்!
சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினர் மேல் மாகாணத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் போது, 48 பாடசாலைகளில் நுளம்பு முட்டைகள் இருந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
120 பாடசாலைகளில் இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, 148 அரச நிறுவனங்களிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 48 நிறுவனங்களில் நுளம்பு முட்டைகள் இருந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், மேல் மாகாணத்தில், நுளம்பு பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 316 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்கடுகின்றது.

Comments
Post a Comment