Skip to main content

66 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்திய பிரஜை கைது



கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருதொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை இந்தியாவுக்கு கடத்திச்செல்ல முற்பட்ட இந்திய பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து சுமார் 66 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.
45 ஆயிரம் அமெரிக்க டொலர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் சுமார் 45 வயதுடைய வர்த்தகர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவரிடமிருந்த வெளிநாட்டு நாணயத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 1 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

Comments