கடலில் உயிருக்கு போராடிய 7 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
காலி கடற்பகுதியில் மீன்பிடிக்கச்சென்ற நிலையில் படகு செயலிழந்ததால் உயிருக்கு போராடிய ஏழு மீனவர்களை கடற்படையினர் மீட்டு காலி துறைமுகத்துக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
கடலில் தங்கி மீன்பிடிக்க கூடிய படகொன்று வணிக கப்பலொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியதால் குறித்த படகு செயலிழந்துள்ளது.
இந்நிலையில் கரைக்கு வர முடியாமல் நீரில் தத்தளித்த மீனவர்களையும், படகினையும் கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
குறித்த படகினை கரையிலிருந்து சுமார் 9 மைல்கள் தூரத்தில் வைத்து கடற்படையினர் மீட்டுள்ளனர்.

Comments
Post a Comment