எறாவூரில் 7 வயது சிறுமியைக் காணவில்லை.!

மட்டக்களப்பு,  ஏறாவூர் பொலிஸ் பிரிவு மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த  இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும்  அப்துல் றஹீம் பாத்திமா சுஹுனா (வயது 07) என்ற சிறுமியை இன்று காலை 10 மணியிலிருந்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பள்ளிவாசல்களில் அறிவித்தல் கொடுத்துள்ளனர்.

இச்சிறுமி மிச்நகர் பாடசாலையிலிருந்து காலை 10.00 மணியளவில் வெளியாகி இதுவரையிலும் வீடுவந்து சேரவில்லை. பாடசாலைச் சீருடையுடனேயே சிறுமி காணாமல் போயுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைக்கு அருகிலேயேதான் சிறுமியின் வீடு உள்ளது. பெற்றோரும், உறவினர்களும் பொதுமக்களும் தற்போது சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எறாவூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

-அப்துல் கையூம்

Comments