கொழும்பில் நாளை 7 மணித்தியால நீர் வெட்டு.!

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம், மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபயசேகரபுர, பண்டாரநாயக்க புர மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவிருக்கின்றது.

Comments