மாணவர்களுக்கான சீருடைக் கூப்பன் 8 ஆம் திகதி விநியோகம்!
அரச பாடசாலை மாணவர்கள் இலவச சீருடை பெறுவதற்கான கூப்பன்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு இந்த கூப்பன்களை கிடைக்கச் செய்வதற்கு இலகுவான நடைமுறையொன்று பின்பற்றப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வருடத்தைப் போன்று மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கோ, கையொப்பம் இடுவதற்கோ அவசியமில்லையென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஆரம்பப் பிரிவு மாணவர்களின் சீருடை கூப்பன்களுக்கான பொறுப்பை அப்பிரிவு ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். தரம் 6 முதல் ஏனைய சகல மாணவர்களும் அவர்களுக்குரிய கூப்பன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
வகுப்புக்குப் பொறுப்பான ஆசிரியர் இந்த கூப்பன்களை விநியோகம் செய்வார்.
எந்தவொரு மோசடியும் இடம்பெற முடியா வண்ணம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கூப்பன்கள் முத்திரையிடப்பட்டுள்ளதாகவும் இப்பிரிவுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment