நோயினால் வாடும் மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது என்ன..??
ஒரு குடும்பத்தில் ஆணுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலும் சரி, பெண்ணுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலும் சரி அதிகம் அவதிப்படப் போவது அந்த வீட்டின் மூத்த பெண் தான். அவள் தாய், மனைவி, சகோதரி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஒரு ஆணுக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும் போது அனைத்தையும் ஒரு பெண்ணுடன் இருந்து தான் எதிர்பார்ப்பான். ஆனால், பெண்ணுக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும் போது பார்த்து பத்திரமா இரு என கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிடுவார்கள்.
அரவணைப்பு.
தங்களை அரவணைப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போதும் தன்னை வேலை செய்ய கூறக் கூடாது எனவும், உடன் இருந்து தழுவியப்படியே இருக்க வேண்டும் என 49% பெண்கள் கூறியுள்ளனர்.
சமையல்.
சமையல்.
உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போது தங்கள் உதவி நாடாமல் அவர்களே சமைத்து தங்களுக்கும் உணவு பரிமாறிவிட்டு செல்ல வேண்டும் என 46% பெண்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டு வேலை.
வீட்டு வேலை.
பாத்திரம் கழுவி வைத்தல், துணி துவைத்தல், வீட்டை சுத்தம் செய்தல் போன்றவற்றை அவர்களே செய்து விட வேண்டும் என 34% பெண்கள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை.
மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல், சிகிச்சை முடியும் வரை அன்புடன் பார்த்துக்கொண்டு அழைத்து வர வேண்டும் என 26% பேர் தெரிவித்துள்ளனர்.
உடன் இருப்பது.
உடன் இருப்பது.
மற்ற வேலைகளை உதறி தள்ளிவிட்டு தன்னுடன் இருந்து தன்னை தனியாக விட்டுவிடாமல் அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என 11% பெண்கள் தெரிவித்துள்ளனர்.
கவனிப்பு.
கவனிப்பு.
மற்ற வேலைகளைவிட தங்கள் மீது அதிகமாக கவனம் செலுத்த வேண்டும், தும்மினால், இருமல் வந்தால் அடுத்த அரைநொடியில் "என்ன ஆச்சும்மா.." என அருகே வந்து நிற்க வேண்டும் என 10% பெண்கள் தெரிவித்துள்ளனர்.
மசாஜ்.
மசாஜ்.
உடல்நலன் குன்றியிருக்கும் போது உடல் சோர்வாக, அசதியாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் மசாஜ் செய்துவிட வேண்டும் என 7% பேர் தெரிவித்துள்ளனர்.


Comments
Post a Comment