திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 9.30 மணி முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வளாகத்தில் தாதியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்திய அதிகாரியொருவர் தாதியொருவரை பொது இடத்தில் வைத்து தூற்றியதாகத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தாதியர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Comments