மைத்திரியின் எளிமை மீண்டும் நிரூபணம்!

இலங்கையின்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானர் என்ற நன்மதிப்பை பெற்றவர் அதனை உறுதிபடுத்தும் மற்றொரு நிகழ்வு இன்றும் இடம்பெற்றது.

நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்டம் தொடர்பான அமர்வு தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதன் போது ஜனாதிபதியும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்.

நாடாளுமன்றத்தில் நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டி சாலையே அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மதிய நேர உணவை வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவையே   நாடாளுமன்றத்தில் அருந்தினார்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

Comments